a3வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முள்ளியவளை பாரதி இல்ல பிள்ளைகளுக்கு 108 பாதணிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. லண்டனைச் சேர்ந்த கஸ்தூரி அவர்களின் நிதி அனுசரணை மூலம்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையை இழந்த பிள்ளைகள் வாழும் முல்லைத்தீவு, முள்ளியவளையில் உள்ள பாரதி இல்ல 108 பெண் பிள்ளைகளுக்கான பாதணிகள் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. பாரதி இல்ல நிர்வாகத்தினால் இல்ல பிள்ளைகளுக்கு பாதணிக்காண தேவை இருப்பதாகவும் இதனை தந்துதவுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் லண்டனைச் சேர்ந்த கஸ்தூரி அவர்களின் நிதி அணுசரனையின் மூலம் இவ் பாதணிகள் வழங்கப்பட்டுள்ளன. இல்ல பிள்ளைகளின் தேவை அறிந்து அவர்களுக்கான இவ் மனிதபிமான உதவியினை செய்த கஸ்தூரி அவர்களுக்கு இல்ல பிள்ளைகள் சார்பாகவும் எமது சங்கத்தின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை கூறிக்கொள்வதுடன். இவரும் இவரது குடும்பமும் சீரும் சிறப்புடனும் வாழ இறைவனை பிரார்த்திக்கின்றோம். (வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம்)

a1 a2 a3 a4