daqwபாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்ததையடுத்து அவர் பாகிஸ்தான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் நவாஸ் ஷெரீப் ஆதாயம் பெற்றுள்ளதால் அவர் குற்றவாளி என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதனால், பிரதமர் பதவியிலிருந்து அவரை தகுதி நீக்கம் செய்வதாகவும், நவாஸ் ஷெரீப் மீது வழக்குப்பதிவு செய்து அந்த வழக்கை தேசிய நம்பகத்தன்மை குழு விசாரணை செய்து 6 வாரத்திற்குள் விசாரணை அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்யவேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். பாராளுமன்றத்திற்கு நேர்மையற்ற தகவல்களை தெரிவித்ததால் பிரதமர் பதவியில் நீடிக்க நவாஸ் ஷெரீப்புக்கு தகுதியில்லை எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுபடி நவாஸ் ஷெரிப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் இன்று பிற்பகல் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.