Header image alt text

Prasathஅமெரிக்காவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக பணியாற்றிய பிரசாத் காரியவசம், வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய அசல வீரகோன், சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஒரு வருட காரணமாக புதுடில்லியில் இலங்கைக்கான உயர் ஸ்தானிகராக செயற்பட்டுவரும் எசல வீரக்கோன் தூதுவர் பதவியில் இருக்கும் சிரேஸ்ட அதிகாரியாவார்.

DSCN0624முல்லைத்தீவு மாவட்டத்தின், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சின்னச்சாளம்பன் கிராமத்தில் அமைந்துள்ள அன்பழகன் முன்பள்ளியில் பயிலும் மாணவச் சிறார்களின் பயிற்சிக்கும், பயன்பாட்டிற்குமாக, பாண்ட் வாத்தியக் கருவிகளின் தொகுதியினை நேற்று (28.07.2017) அன்பளிப்பு செய்துள்ளார்.

மாகாணசபை நிதி ஒதுக்கீட்டில் பெறப்பட்ட தொகையின் மூலம் வழங்கப்பட்ட இந்நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் புளொட் உறுப்பினர் க.சிவநேசன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர் கனக தவராஜா மாஸ்டர், துணுக்காய் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர், ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் புதிதாக கடமையேற்றுள்ள நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருடன் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
Read more

eeவடக்கில் பொருளாதார ரீதியான கட்டமைப்பினை மேன்படுத்த ஜேர்மன் அரசாங்கம் முன்வந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் யுத்தத்தினால் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் பொருளாதார ரீதியான கட்டமைப்பினையும் அண்மைக்காலமாக மீள்குடியேறிய மக்களின் பொருளாதார ரீதியான தன்மையினை மேன்படுத்த நாம் பல்வழியிலான செயற்றிட்டங்களை முன்னேடுக்க ஜேர்மன் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. Read more

கௌரவ. இரா.சம்பந்தன், பா.உ.,
தலைவர்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு.

அன்பின் ஐயா, வடக்கு மாகாண சபை மேலதிக ஆசனத்திற்கான அங்கத்தவர் நியமனம் தொடர்பாக

D.sithadthan MPவடக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைக்கப்பெற்ற இரண்டு மேலதிக ஆசனங்களில் ஒன்றிற்கு, சுழற்சி முறையில் ஒவ்வொரு பங்காளிக் கட்சிக்கும் வழங்கப்பட்டுவந்த வாய்ப்பு எமது கட்சிக்கு மறுக்கப்படுவதை தங்களின் கவனத்திற்கு அவசரமாக கொண்டுவர விரும்புகிறேன்.

வட மாகாணசபைத் தேர்தல் நடந்துமுடிந்தவுடன் இடம்பெற்ற கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளிற்கிடையேயான கூட்டத்தில், கிடைத்த மேலதிக ஆசனங்களில்; ஒரு ஆசனமானது, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முஸ்லீம் ஒருவருக்கு வழங்கப்படுமென தாங்கள் எடுத்த முடிவிற்கமைய, அஸ்மினுக்கும் மற்றயது ஒவ்வோர் கட்சியையும் ஒரு வருடம் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுழற்சி முறையில் வழங்குவதெனவும், அதனடிப்படையில் ஐந்தாவதும் இறுதியுமான வருடத்தில் அவ்வாசனம் புளொட் அமைப்புக்கு வழங்கப்படுமெனவும் முடிவுசெய்யப்பட்டு ஐந்து கட்சிகளும் இதற்கு சம்மதித்திருந்தன. Read more

gfgfமட்டக்களப்பு, வெல்லாவெளி பிரதேசத்துக்கான புதிய பொலிஸ் நிலையம், இன்று காலை திறந்துவைக்கப்பட்டது. இதுவரை காலமும் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பாலமுனை பிரதேசத்தில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் இயங்கி வந்த வெல்லாவெளி பொலிஸ் நிலையமே, புதிய பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுத் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

30 வருடங்களுக்கு முன்னர் வெல்லாவெளி பொலிஸ் நிலையம் இருந்த இடத்திலேயே, புதிய பொலிஸ் நிலையம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசிர் அகமட், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி, கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், மா.நடராஜா, ஞா.கிருஸ்ணபிள்ளை உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

ertretreமன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி வழக்கில் மன்னார் மாவட்ட நீதவானுக்கு எதிராக விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் நீதவான் ஆசீர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா, பாதிக்கப்பட்டவர்களுக்கு சார்பாக செயற்படுவதாக தெரிவித்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதவான் ஆசீர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஐh குற்ற விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாகவும், இந்த வழக்கை விசாரணை செய்த முன்னாள் நீதவானின் செயற்பாடுகளுக்கு பிறழ்வான விடயங்களை இவர் மேற்கொள்வதாகவும் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more