DSCN0624முல்லைத்தீவு மாவட்டத்தின், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சின்னச்சாளம்பன் கிராமத்தில் அமைந்துள்ள அன்பழகன் முன்பள்ளியில் பயிலும் மாணவச் சிறார்களின் பயிற்சிக்கும், பயன்பாட்டிற்குமாக, பாண்ட் வாத்தியக் கருவிகளின் தொகுதியினை நேற்று (28.07.2017) அன்பளிப்பு செய்துள்ளார்.

மாகாணசபை நிதி ஒதுக்கீட்டில் பெறப்பட்ட தொகையின் மூலம் வழங்கப்பட்ட இந்நிகழ்வில் வடக்கு மாகாணசபையின் புளொட் உறுப்பினர் க.சிவநேசன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர் கனக தவராஜா மாஸ்டர், துணுக்காய் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர், ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் புதிதாக கடமையேற்றுள்ள நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருடன் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

DSCN0597 DSCN0601 DSCN0604 DSCN0610 DSCN0612 DSCN0615 DSCN0621 DSCN0624 DSCN0626 DSCN0627 DSCN0628