eeவடக்கில் பொருளாதார ரீதியான கட்டமைப்பினை மேன்படுத்த ஜேர்மன் அரசாங்கம் முன்வந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கில் யுத்தத்தினால் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களின் பொருளாதார ரீதியான கட்டமைப்பினையும் அண்மைக்காலமாக மீள்குடியேறிய மக்களின் பொருளாதார ரீதியான தன்மையினை மேன்படுத்த நாம் பல்வழியிலான செயற்றிட்டங்களை முன்னேடுக்க ஜேர்மன் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜார்ன் ரோப் இதனை தெரிவித்தாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் விஐயம் மேற்கொண்டு வடக்கு வருகைதந்துள்ள இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜார்ன் ரோப் ஜேர்மன் நாட்டின் பொருளாதார மத்திய நிலைய பணிப்பாளர் ஆன்ட் ரியாஸ் தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவினர்கள் நேற்று யாழ்ப்பாணம் சென்றிருந்தனர்.

இவர்கள் நேற்றுமாலை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பு மாகாண முதலமைச்சரின் வாஸ்தலத்தில் நடைபெற்றது. குறித்த சந்திப்பில் ஜேர்மன் அரசாங்கத்தினால் வடக்கில் முன்னேடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்றிட்டங்கள் பற்றியும் எதிர்வரும் ஆண்டுகளில் முன்னேடுக்கப்படவுள்ள பொருளாதார ரீதியான செயற்றிட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.