அமெரிக்காவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக பணியாற்றிய பிரசாத் காரியவசம், வெளிவிவகார அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய அசல வீரகோன், சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஒரு வருட காரணமாக புதுடில்லியில் இலங்கைக்கான உயர் ஸ்தானிகராக செயற்பட்டுவரும் எசல வீரக்கோன் தூதுவர் பதவியில் இருக்கும் சிரேஸ்ட அதிகாரியாவார்.