Posted by plotenewseditor on 30 July 2017
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 30 July 2017
Posted in செய்திகள்
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, முதலாவது கடமை விஜயத்தை, நேற்று யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்துக்கு மேற்கொண்டிருந்தார்.
இவருக்கான வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து அவரால் பாதுகாப்புப் படைத் தலைமையக வளாகத்தினுள், மர நடுகை நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியினால், நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து யாழ் குடாநாட்டில் உயர்தரப் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் கைக்கடிகாரங்களை வழங்கும் நிகழ்வு, யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 30 July 2017
Posted in செய்திகள்
நடந்து முடிந்த 28வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளையினர் தெரிவுசெய்யப்பட்ட 09 கழக உறுப்பினர்களின் குடும்பகளிற்கு, அவர்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் வாழ்வாதார உதவிகளை வழங்க முன்வந்திருந்தனர்.
அதன் முதற்கட்டமாக கடந்த 16.07.2017 அன்று வவுனியாவில் வைத்து 05 குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.
1. வவுனியா இறம்பைக்குளத்தில் வதியும் மறைந்த கழக உறுப்பினர் கந்தசாமி (ரெயிலர்) இன் குடும்பத்தினர் தற்போது சிறிய அளவில் நடாத்தி வரும் கால்நடை வளர்ப்பு தொழிலை விருத்தி செய்யுமுகமாக ரூபா 35,000/-ம், Read more
Posted by plotenewseditor on 30 July 2017
Posted in செய்திகள்
சார்க் நாடுகளின் சுகாதார அமைச்சர்களின் மாநாடு 06 ஆவது தடவையாக கொழும்பு, கல்கிஸ்ஸையில் ஆரம்பமாகியுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் ஆரம்பமாகியுள்ள இம்மாநாடு சார்க் வலய நாடுகளுக்கு முக்கியத்துவமிக்கதாக கருதப்படுகிறது.
மேலும் இம்மாநாட்டின் போது சுகாதார பிரச்சினைகள் தொடர்பிலேயே கலந்துரையாடப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தொற்றா நோய்கள், ஊட்டச்சத்து குறைபாடு, எச்.ஐ.வி நோய், சயரோகம் உள்ளிட்ட பல நோய்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படுமென சுகாதார அமைச்சு தகவல் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்ததக்கது.
Posted by plotenewseditor on 30 July 2017
Posted in செய்திகள்
யாழ்ப்பாணம் நவக்கிரி, மாணிக்கப்பிள்ளையார் கோவில் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர், இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், ஒருவர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம், நேற்று இடம்பெற்றுள்ளது. புத்தூர் – மேற்கு நவக்கரி பகுதியைச் சேர்ந்த, ஞானேஸ்வரன் நிரோஜன் (வயது22) என்ற இளைஞனே, வெட்டுக்காயங்களுக்கு இலக்காகியுள்ளார். சம்பவத்தில் படுகாயங்களுக்கு இலக்கான இளைஞன், அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக இன்றுகாலை, யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 30 July 2017
Posted in செய்திகள்
நவாஸ் ஷெரீஃப் தனது பிரதமர் பதவியை இராஜிநாமா செய்ததையடுத்து, அந் நாட்டின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீஃபின் இளைய சகோதரர் ஷேபாஸ் ஷெரீஃப் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய செயற்குழுக்கூட்டம் நேற்றுமாலை நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக, ஷேபாஸ் ஷெரீஃப், அக்கட்சியினரால் தெரிவு செய்யப்பட்டார். இவர், எதிர்வரும் 2018ஆம் ஆண்டு தேர்தல் வரும்வரை பாகிஸ்தான் பிரதமராக செயற்படுவார் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more