Shahbaz-Sharif-1-1நவாஸ் ஷெரீஃப் தனது பிரதமர் பதவியை இராஜிநாமா செய்ததையடுத்து, அந் நாட்டின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீஃபின் இளைய சகோதரர் ஷேபாஸ் ஷெரீஃப் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய செயற்குழுக்கூட்டம் நேற்றுமாலை நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக, ஷேபாஸ் ஷெரீஃப், அக்கட்சியினரால் தெரிவு செய்யப்பட்டார். இவர், எதிர்வரும் 2018ஆம் ஆண்டு தேர்தல் வரும்வரை பாகிஸ்தான் பிரதமராக செயற்படுவார் என அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தமை நிரூபிக்கப்பட்டதால், பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் அறிக்கையை அடுத்து, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து, நவாஸ் ஷெரீஃப் தனது பிரதமர் பதவியை இராஜிநாமா செய்தார். இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக, நவாஸ் ஷெரீஃபின் இளைய சகோதரரான ஷேபாஸ் ஷெரீஃப், அக்கட்சியினரால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.