towநடந்து முடிந்த 28வது வீரமக்கள் தினத்தையொட்டி புளொட் அமைப்பின் கனடா கிளையினர் வடக்கு மாகாணத்தில் வறிய, தூர இடங்களில் இருந்து பாடசாலை செல்லும் பாடசாலை மாணவர்களுக்கு மொத்தமாக 18 சைக்கிள்களை வழங்கியிருந்தனர். 
முதற்கட்டமாக, யாழ்ப்பாணத்தில் 02 சைக்கிள்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 02 சைக்கிள்களும், வவுனியா மாவட்டத்தில் 08 சைக்கிள்களும் வழங்கப்பட்டிருந்தன. 
அதன் தொடர்ச்சியாக, மீதமாயிருந்த 06 சைக்கிள்களும் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் வடக்கு திம்பிலி கிராமம், நெருக்கடிகள் நிறைந்த கிராமமாக இனங்காணப்பட்டு அங்கிருந்து தொலைதூரம் சென்று கல்வி பயிலும், வறிய குடும்பங்களைச் சேர்ந்த 06 மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டன. 

23.07.2017ல் நடைபெற்ற சைக்கிள்கள் வழங்கிவைத்த நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் பொருளாளரும், வட மாகாணசபை உறுப்பினருமான க.சிவநேசன், கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட பொருளாளரும், செயற்குழு உறுப்பினருமான க.தவராஜா மாஸ்டர், செயற்குழு உறுப்பினர் வே.சிவபாலசுப்பிரமணியம் (மணியண்ணை) ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர். 

பயனாளிகள்
1. முருகேசு குயிலன் – C/O காயத்ரிதேவி, 1ம் வட்டாரம், சுரேஷ்குடியிருப்பு
2. விக்னேஸ்வரன் மோகனப்பிரியா – C/O சி.விக்னேஸ்வரன், 37, திம்பிலிவீட்டுத்திட்டம், கோம்பாவில் 
3. ஜனசீலன் ஜீவனா – C/O ராதா ஜனசீலன், மருதமடு வீதி, கைவேலி
4. கிருசாந்தன் தயாபரன் – C/O வள்ளி தயாபரன், கைவேலி
5. சந்திரகுமார் ராம்ராஜ் – C/O வேலு சந்திரகுமார் , கண்ணன்குடியிருப்பு, கோம்பாவில்
6. தியாகராஜா டிலோஜன் – C/O சு.தியாகராஜா, புதியகுடியிருப்பு, திம்பிலி
IMG_5928 IMG_5925IMG_5926