IMG_5939நடந்து முடிந்த 28வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளையினர் தெரிவுசெய்யப்பட்ட 09 கழக உறுப்பினர்களின் குடும்பகளிற்கு, அவர்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் வாழ்வாதார உதவிகளை வழங்க முன்வந்திருந்தனர்.

அதன் முதற்கட்டமாக கடந்த 16.07.2017 அன்று வவுனியாவில் வைத்து 05 குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

1. வவுனியா இறம்பைக்குளத்தில் வதியும் மறைந்த கழக உறுப்பினர் கந்தசாமி (ரெயிலர்) இன் குடும்பத்தினர் தற்போது சிறிய அளவில் நடாத்தி வரும் கால்நடை வளர்ப்பு தொழிலை விருத்தி செய்யுமுகமாக ரூபா 35,000/-ம்,

2. செட்டிகுளம், வீரபுரத்தில் வதியும் மறைந்த முன்னைநாள் கழக உறுப்பினர் கனகராஜாவின் மனைவிக்கு ரூபா 24,899/- பெறுமதியான தையல் இயந்திரமும்,

3. மன்னார், தட்சணாமருதமடுவில் வதியும் கழகத்தின் மகளிர் அமைப்பு உறுப்பினர் செல்வநாயகம் கற்பகம் (அமலி)க்கு அவரது வருவாயை அதிகரிக்கும் பொருட்டு, கால்நடை வளர்ப்புக்காக ரூபா 35,000/-ம்,

4. கிளிநொச்சி, வட்டக்கச்சியில் வதியும் கழகத்தின் உறுப்பினர் சண்முகம் நித்தியானந்தன் (துரை) அவர்களின் தூர்ந்து போயுள்ள தோட்டக்கிணற்றை சீர்படுத்தி தோட்டைச் செய்கையை விருத்தி செய்யும் நோக்கில் ரூபா 40,000/-ம்,

5. கண்டாவளை, புளியம்பொக்கனையில் வதியும் கழக உறுப்பினர் நல்லதம்பி திருச்செல்வம் அவர்களின் குடும்ப வறுவாயை அதிகரிக்கும் பொருட்டு ரூபா 24,899/- பெறுமதியான தையல் இயந்திரமும் வழங்கப்பட்டிருந்தன.

இவற்றின் தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மேலும் 02 கழக உறுப்பினர்களின் குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவிகள் கடந்த வாரம் 27.07.2017ல் வழங்கப்பட்டுள்ளது.

1. மாலைதீவில் மரணமடைந்த சின்னத்துரை ஜெயபாலன் (பாப்பாக்குமார்) இன் சகோதரியான முல்லைத்தீவு, மாமூலையில் வதியும் திருஞானசம்பந்தம் லீலாவதிக்கு அவரது குடும்ப வருமானத்தை பெருக்கும் நோக்கில் கால்நடை வளர்ப்பிற்காக ரூபா 35,000/-ம்,

2. முள்ளியவளையில் வதியும் மறைந்த கழக உறுப்பினர் இராசையா சிவானந்தமணி (கரூர் விஜயன்) இன் சகோதரர் இ.சிறிஸ்கந்தராசாவிற்கு கோழி வளர்ப்புக்காக ரூபா 30,000/-ம் வழங்கப்பட்டிருந்தன.

இவ் வாழ்வாதார உதவிகள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் பொருளாளரும், வட மாகாணசபை உறுப்பினருமான க.சிவநேசன் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முல்லை மாவ்டட பொருளாளர் க.தவராஜா மாஸ்டர் ஆகியோரால் வழங்கப்பட்டிருந்தன.

IMG_5937 IMG_5939 IMG_5940