putinரஷ்யாவில் இருந்து அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள 755 தூதரக அதிகாரிகளையும் ரஷ்யாவில் இருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மீது அண்மையில் புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்ததையடுத்து, ரஷ்யா இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. அமெரிக்காவுடன் உறவுகள் மேம்பட எந்த உடனடியான வாய்ப்பும் இல்லை என்றும் உறவுகள் மேம்பட நீண்ட காலம் ஆகலாம் என்றும் ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்.  தொலைக்காட்சி நேர்காணலில் கலந்துகொண்ட புதின், ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யாவில் பணியாற்றி வருவதாகவும், அதில் 755 பேரை செப்டம்பர் 1 ஆம் திகதிக்குள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற உதவும் வகையில், பிரசாரம் செய்யுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டதாக அமெரிக்க உளவு அமைப்பு குற்றம்சாட்டி சர்ச்சை எழுந்தநிலையில், அமெரிக்க செனட்சபை ரஷ்யாமீது பொருளாதார தடை விதிக்கும் சட்டமூலத்தை நிறைவற்றியதை அடுத்து, ரஷ்யாவுக்கு அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.