கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்கின்ற 8,203 சிறுவர்களில், தாயையும் தந்தையும் இழந்து 31 சிறுவர்கள் உள்ளனரென, பிரதேச செயலகப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தந்தையை மட்டும் இழந்த சிறுவர்கள் 325 பேரும், தாயை மட்டும் இழந்த சிறுவர்கள் 40 பேரும், தந்தையைப் பிரிந்து வாழும் சிறுவர்கள் 13 பேரும், தாயைப் பிரிந்து வாழும் சிறுவர்கள் 12 பேரும், மாற்று வலுவுள்ள சிறுவர்கள் 65 பேரும், மனவளர்ச்சி குன்றிய சிறுவர்கள் 03 பேரும், சிறுவர்கள் இல்லங்களில் 96 சிறுவர்களும், சீர்திருத்தப் பாடசாலைகளில் 13 சிறுவர்களும் உள்ளனர் எனவும், பிரதேச செயலகப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.