சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை நாடு திரும்புமாறு, மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.
சுவிஸ் தேசிய தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்தின் தூதரகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் சுமார் 50 ஆயிரம் இலங்கையர்கள் வரையில் வசிக்கின்றனர். அவர்கள் நாடு திரும்பி நாட்டின் அபிவிருத்திக்கான தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.