லண்டனில் வசிக்கும் செல்வி கிஷ்னவி அவர்களின் பிறந்த தினத்தையொட்டி தோழர் மணியின் வேண்டுகோளுக்கிணங்க முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டதோடு, தேனீர் வேளை சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றது. வன்னி மேம்பாட்டுப் பேரவையின் ஒழுங்கமைப்பில் 31.07.2017 திங்கட்கிழமை அன்று நடைபெற்ற இந்நிகழ்வில் புளொட் அமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் மற்றும் வன்னி மேம்பட்டு பேரவையின் தலைவர் கனக தவராசா மற்றும் பலர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.