ertrtrயாழ்ப்பாணம் கோப்பாயில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவர் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர இன்று தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அங்கு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.  வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஐவரை நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். அதில் பிரதான சந்தேகநபரும் அடங்குவார். அவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவர் ஆவா குழுவில் அங்கம் வகித்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.