doctorஇலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பலருக்கு போலியான மருத்துவப் பட்டங்களை வழங்கி வந்த நான்கு பேருக்கு கொல்கட்டா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொல்கட்டாவில் செயற்பட்டு வந்த அவர்கள் வௌ;வேறு சந்தர்ப்பங்களில் இந்திய குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.அவர்களின் பிரதானியான ரமேஸ் சந்திர பைந்யா, கடந்த மே மாதம் கொல்கட்டா விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார்.  அவர்கள் நால்வரும் பணத்துக்காக மருத்துவத் துறையின் போலி பட்டங்களையும் பதக்கங்களையும் விற்பனை செய்து வந்துள்ளது தெரியவந்ள்ளது. அவர்களுக்கு எதிராக தற்போது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, கொல்கட்டா குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பணிப்பாளர் ராஜேஷ்குமார் கூறியுள்ளார்.