26 (4)நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தபோது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் மனைவியை மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

பொலிஸ் அதிகாரியின் மனைவியான கெ.ஜீ.பி குமுதுனி முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் என்பதுடன், 05 ஆண்டுகளுக்கு முன்னர் பொலிஸ் சேவையிலிருந்து விலகியிருந்ததாக கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பொருளாதார பிரச்சினை காரணமாக தான் மீண்டும் பொலிஸ் சேவையில் இணைந்து கொள்வதாக அவர் விடுத்த கோரிக்கையை ஆராய்ந்த பின் பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி பொலிஸ் ஆணைக்குழு இந்த அனுமதியை வழங்கியுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் கூறியுள்ளார்.