வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் இளைஞர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு, அங்குரார்ப்பண நிகழ்வும் இன்று (04.08.2017) கல்லூரியின் பிரதான மண்டபத்தில் முதல்வர் திரு த.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக வட மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். சிறப்பு அதிதியாக வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதா திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். கௌரவ அதிதிகளாக செட்டிகுளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் திரு சு.ஜெகதீஸ்வரன்(சிவம்), வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் திரு சு.காண்டீபன், கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளர் திரு ஜோயல் நிரோஷான், கோவில்குளம் சிவன் ஆலயத்தின் அறங்காவலர் சபையின் தலைவர் மற்றும் வவுனியா தெற்கு கல்வி வலய சமூகவியல் உதவிப் பணிப்பாளர் திருமதி எஸ்.சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.