bavanதிருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்கட்கு,

மாவட்ட செயலகம், முல்லைத்தீவு

04.08.2017

 

கனம் அம்மணி,

முல்லைத்தீவு பிரதேசத்தில் சுருக்கு வலை மற்றும் டைனமெட் பாவித்து மீன்பிடி தொழிலை மேற்கொள்ளுவதாக முறைப்பாடுகளும் தகவல்களும் கிடைக்கப் பெற்றுள்ளது. மேலும் கரைவலைப்பாடுகளில் உழவு இயந்திரத்தினை பாவிப்பதும் தெளிவாக அறியக்கூடியதாகவும் உள்ளது.• கடல்வள நீரியல் திணைக்களம் குறித்த சிலருக்கு சுருக்கு வலையினை பாவிப்பதற்கு அனுமதியினை எவ்வாறு வழங்கியுள்ளது??

• டைனமெட் பாவிக்கும்போது பாதுகாப்பு பிரிவினர் உட்பட சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் நடவடிக்கைகள் எடுக்க தவறியமைக்கான காரணங்கள் யாவை?????

• கரைவலைப்பாடுகளில் உழவு இயந்திரங்கள் பாவிக்கும்போது திணைக்களங்கள் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்காமைக்கான காரணங்கள் யாவை?????

• மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் செய்யப்பட்டும் நடவடிக்கைகள் எடுக்காமைக்கான காரணங்கள் யாவை???

மேற்படி கேள்விகளுக்கான உண்மை நிலையினையும் தொடர் நடவடிக்கைகளையும், மீன்பிடி தொழிலை தமது ஜீவனோபாயமாக உள்ள முல்லைத்தீவு மாவட்ட சமுகத்தின் நலனை கருத்தில் கொண்டு செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வினையமுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

மக்கள் சேவையில்,

க.சிவநேசன் – மாகாணசபை உறுப்பினர்
வடக்கு மாகாணசபை

பிரதி:
• கௌரவ அமைச்சர், மீன்பிடி அமைச்சு, வடக்கு மாகாணசபை
• உதவி பணிப்பாளர், கடல்வள நீரியல் திணைக்களம், முல்லைத்தீவு