vm2017நடந்து முடிந்த 28வது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு புளொட் அமைப்பின் புலம்பெயர்ந்த உறுப்பினர்கள், தெரிவுசெய்யப்பட்ட 09 கழக உறுப்பினர்களின் குடும்பங்களிற்கு, அவர்களின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் வாழ்வாதார உதவிகளை வழங்க முன்வந்திருந்தனர். அதன் முதற்கட்டமாக கடந்த 16.07.2017 அன்று வவுனியாவில் வைத்து 05 குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டிருந்தன.

அத்துடன், இரண்டாம் கட்டமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மேலும் 02 கழக உறுப்பினர்களின் குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவிகள் கடந்த வாரம் 27.07.2017ல் வழங்கப்பட்டிருந்தன. மேலும், மூன்றாவதும் இறுதியுமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 02 கழக உறுப்பினர்களின் குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவிகள் கடந்த 01.08.2017ல் வழங்கப்பட்டிருந்தன. இதன்படி, 1. 15.06.1989ல் முள்ளிக்குளம் தாக்குதலில் கொல்லப்பட்ட புளொட் உறுப்பினரின் தாயாரான, கிரான்குளத்தில் வதியும் மயில்வாகனம் மனோன்மணி என்பவருக்கு, அரிசி வியாபாரம் செய்வதற்காக ரூ 35000/-ம்

2. 09.01.1990ல் சுட்டுக் கொல்லப்பட்ட புளொட் உறுப்பினர் கணேசலிங்கத்தின் மனைவியான, கொக்கட்டிச்சோலை கடுக்காமுனையில் வதியும் சயமலர் அவர்களுக்கு நெல் குற்றி அரிசி வியாபாரம் செய்வதற்காக ரூ 35000/-ம் வழங்கப்பட்டுள்ளது. முதலிரு கட்ட உதவிகளுக்கான நிதியினை புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளையும் மூன்றாம் கட்ட உதவிக்கான நிதியினை இலண்டனில் வதியும் த.சிவபாலனும் வழங்கியிருந்தனர்.

செங்கலடி சீனிப் போடியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் புலம்பெயர்ந்த புளொட் உறுப்பினர்களின் 03ம் கட்ட உதவிகள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தலைமையில் வழங்கப்பட்டன.

நிகழ்வில் கனடாவில் இருந்து வருகை தந்த சுப்பிரமணியம் ரவீந்திரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ந.இராகவன், கமலநாதன், கழக உறுப்பினர் அன்பழகன் (உலகன்) உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

திரு. சுப்பிரமணியம் ரவீந்திரன் அவர்களால் 18 துவிச்சக்கரவண்டிகளும், பாடசாலை மாணவர்களுக்கு இந்நிகழ்வில் வைத்து வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CIMG5790 CIMG5791