china high commissionerஇலங்கையை தாம் ஒருபோது பாதுகாப்புத் தளமாக பயன்படுத்தப்போவதில்லை என சீனா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீன Yi Xianliang கொழும்பு துறைமுகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை குறிப்பிட்டார்.

இந்து சமுத்திரத்தில் சீனாவின் பாதுகாப்பை நிலை நிறுத்துவதற்கு இலங்கை பயன்படுத்தப்படமாட்டாது.இலங்கையின் அபிவிருத்திக்காக சீனா தனது உதவிகளை பெற்றுக்கொடுக்கும். கடந்த காலங்களில் சீனா இலங்கையில் எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்தது என்பதை அவதானிக்க முடியும்.  இலங்கையின் மருத்துவமனை, வானுர்தித்தளம், துறைமுகம் உள்ளிட்ட துறைகள், அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. இலங்கையானது சீனாவிடம் இருந்து நிதி மற்றும் நல்லெண்ண அடிப்படையிலான உதவிகளை பெறும் முதன்மை நாடாகும். இலங்கையில் சீன உளவுப்பிரிவு அதிகாரிகளோ, இராணுவத்தினரோ அழைத்துவரப்படவில்லை, மாறாக துறைசார் நிபுணர்களும் கல்விமான்களுமே பணிபுரிகின்றனர். எனவே இலங்கை, சீனாவின் பாதுகாப்பு மையமாக பயன்படுத்தப்படக் கூடும் என அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.