dfsdfdsபாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிகளையும் யாழ் மாவட்டத்தில் மீள்குடியேறியுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளையும் பெற்றுக்கொடுப்பதற்காக இங்கிலாந்து தொடர்ந்து இலங்கையுடன் சேர்ந்து செயற்படும் என இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஆலிவர் கொல்வின் தெரிவித்தார். எமது நோக்கமாக நீண்டகாலத்தின் பின்னர் நாம் எதிர்பார்த்து இருக்கின்ற சமகாலத்தில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள், நல்லிணக்க புரிந்துணர்வுகள் என்பன நாங்கள் எதிர்பார்த்த விடயங்களை காணமுடிந்துள்ளது.  அதன் ஒரு அங்கமாக நாம் இலங்கை வந்துள்ளோம். அது தொடர்பாக இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நாம் கதைக்க இருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இரண்டு நாள் விஐயம் மேற்கொண்டுஇலங்கை வந்துள்ள இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் ஆலிவர் கொல்வில் தலைமையிலான 06 பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் நேற்று யாழ் மாவட்டத்திற்கு விஐயம் மேற்கொண்டனர். இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் மாவட்ட செயலாளர் என்.வேதநாயகன் ஆகியோருடன் சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர்.