அளவெட்டி மத்திய விளையாட்டுக் கழகம் நடாத்திய அமரர்கள் லஜிதன், திருக்குமரன் ஞாபகார்த்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி அளவெட்டி மத்திய விளையாட்டுக் கழக மைதானத்தில் 05-08-2017 அன்று மின்னொளியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ த. சித்தார்த்தன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கௌரவ வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக மகாஜன கல்லூரியின் அதிபர் ப.மணிசேகரன் அவர்களும் முன்னாள் வலி-வடக்கு பிரதேச சபை உப தவிசாளர் திரு. சஜீவன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.மிகவும் விறுவிறுப்புடன் இடம்பெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில் புத்தூர் கலைமதி விளையாட்டுக் கழகம் 3-0 என்ற ரீதியில் ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழகத்தினை தோற்கடித்து சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது. இந்நிகழ்வின் இறுதியில் வறுமைக்கோட்டுக்கு கீழ்ப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணாக்கர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டது.