கரவெட்டி இராஜா கிராமத்தின் முன்பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இளஞ்சுடர் விளையாட்டுக் கழகம் மற்றும் இராஜாகிராம கிராம அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் அனுசரணையுடன் 06-08-2017 அன்று இடம்பெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ த.சித்தார்த்தன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கரவெட்டி பிரதேச முன்பள்ளி கல்வி உதவிப் பணிப்பாளர் சி. தில்லைநாதன் அவர்களும் சமுர்த்தி உத்தியோகஸ்தர் க. குகேந்திரன்; அவர்களும் கரவெட்டி கோட்ட முன்பள்ளி இணைப்பாளர் பா. கலைவாணி அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் திரு. காசியன் (ஜெயம்) மற்றும் இளஞ்சுடர் விளையாட்டுக் கழக தலைவர் திரு. கஜன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.