saddsaஉலகின் மிகப் பெரிய பயணிகள் விமானமாக கருதப்படும் ஏ-380 விமானம் இன்று முதல் உத்தியோகபூர்வமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படவுள்ளது.

குறித்த விமானத்தில் கண்காணிப்பு செயற்பாடுகள் ஏனைய பயணிகள் விமான சேவைகளுக்கு ஒத்தாற் போல முன்னெடுக்கபடவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுதளம் புனரமைக்கப்பட்டதன் பின்னர் நவீன விமானங்கள் தரையிறக்கப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் 500 பயணிகளுக்கும் அதிகமானவர்கள் பயணிக்ககூடிய ஏ-380 விமானம் தினந்தோறும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்படும் எனவும் போக்குவரத்து பிரதி அமைச்சர் கூறியுள்ளார். டுபாயிலிருந்து இந்த விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.