2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி வள்ளிபுனம், செஞ்சோலை வளாகத்தில் விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்ட சிறார்களான மாணவர்களின் 11ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் திருவுருவப்படத்திற்கு பல்கலைக்கழக மாணவர்களால் மலர்கள் வைத்து மெழுகுவர்த்திகள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேவேளை செஞ்சோலையில் கொல்லப்பட்ட மாணவர்களின் 11ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று செஞ்சோலை வளாகத்தில் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாணசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உயிரிழந்த மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதாக கூறப்படுகிறது.