புதிய இலத்திரனியல் அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கைகள் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக அடையாள அட்டைக்கு புதிதாக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு இலத்திரனியல் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. 2ம் கட்டமாக ஏற்கனவே தேசிய அடையாள அட்டையைக் கொண்டுள்ளவர்களுக்கு புதிதாக இலத்திரனியல் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.