பணிப்பொறுப்புகள் அமைச்சர் திலக் மாரப்பன, புதிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க, தனது பதவியை இராஜினாமாச் செய்ததையடுத்தே, அந்த வெற்றிடத்துக்கு அமைச்சர் மாரப்பன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில், கடந்த புதன்கிழமையன்று இடம்பெற்ற சந்திப்பொன்றின்போது, அமைச்சர் திலக் மாரப்பனவைத் தயாராக இருக்குமாறு, ஜனாதிபதியும் பிரதமரும் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.