யாழ். சாவகச்சேரி கைதடி கிழக்குப் பகுதியில் இன்று காலை வாந்தி எடுத்த குடும்பஸ்தர் மயங்கி வீழந்து உயிரிழந்துள்ளார். கைதடி கிழக்கைச் சேர்ந்த விஜயானந்தன் விஜயரூபன் (வயது-37) என்பவரே உயிரிழந்துள்ளார்.
இவ் உயிரிழப்புத் தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் சாவகச்சேரி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதனை பார்வையிட்ட நீதிவான், பிரதேச திடீர் சாவு விசாரணை அதிகாரி சீ.சீ.இளங்கீரன் மூலம் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.