யாழ் இந்துக்கல்லூரி அவுஸ்ரேலியாவின் விக்ரோரியா மாநில கிளை பழைய மாணவர் சங்கத்தின் அனுசரணையுடன், வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் புத்தகபைகள் மற்றும் காலணிகள் என்பன அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி நாட்டில் இடம்பெற்ற யுத்த சூழ்நிலை காரணமாக தமது வாழ்க்கைத் துணைகளை இழந்துள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களைக் கொண்ட தூணுக்காய் மாந்தைக் கிழக்கு ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களில் இருந்து முன்னூரிமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 105 மாணவர்களுக்கு சுமார் ரூபா 422128 பெறுமதியான புத்தகப் பைகள், காலணிகள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இன் நிகழ்வு நேற்றுக்காலை 9.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டம் அமைதிபுரம் அ.த.க. பாடசாலையில் நடைபெற்றது இதன்போது முல்லைத்தீவு மாவட்ட அமைதிபுரம் அ.த.க. பாடசாலையில் கல்வி பயிலூம் 61 மாணவர்களுக்கு புத்தகப் பைகளும், 27 மாணவர்களுக்கு காலணிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
அடுத்ததாக, மாங்குளத்தில் நடைபெற்ற நிகழ்வில் தூணுக்காய், மாந்தைக் கிழக்கு மற்றும் ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் யுத்த சூழ் நிலை காரணமாக தமது வாழ்க்கைத் துணையை இழந்துள்ள குடும்பங்களில் இருந்து முன்னூரிமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட 22 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மேற்படி இவ் நிகழ்வுகளில் யாழ் இந்துக்கல்லூரி அவுஸ்ரேலியாவின் விக்ரோரியா மாநில கிளையின் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினரும் வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் முன்னால் சிறுவர் பகுதி அமைப்பளாருமான திரு.ஆதவன்; அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் புத்தகபைகள் மற்றும் காலணிகள் என்பனவற்றை வழங்கி வைத்ததுடன். நிகழ்வில் யாழ் இந்துக்கல்லூரியின் அவுஸ்ரேலியாவின் விக்ரோரியா மாநில கிளையின் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் வட்டு இந்து வாலிபர் சங்க உறுப்பினர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.