jjjjjjjjjjjjjjjjஐ.நா. சபைக்கான பாலின சமத்துவத்துவத்திற்கான ஆலோசகரும் அவுஸ்திரேலியாவின் பாலின சமத்துவத்திற்கான வழக்கறிஞருமான எலிசபத் பிரொட்ரிக் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாலின சமத்துவத்தை இலங்கையில் ஊக்குவிப்பது தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது அவர், வர்த்தகத் தலைவர்கள் உள்ளிட்ட பெண் தொழிலாளர்களை சந்தித்து பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார். அதேசமயத்தில் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளுடனும் சந்தித்து கலந்துரையாடி, இலங்கையில் பாலின சமத்துவம் தொடர்பாக பெற்றுக்கொண்ட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். இச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் தனது வரவேற்புரையில், “அவுஸ்திரேலியாவானது பெண்களுக்கு தலைமைத்துவ பொறுப்புக்களையும் பொருளாதர தரத்தில் அவர்களை மேம்படுத்தவும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிக்கவும் முழுமையாக ஈடுப்பட்டுள்ளது. மேலும் அவுஸ்திரேலியாவின் இலங்கைக்கான முதலீடுகள் பெண்கள் மூலம் அரச மற்றும் தனியார் பொருளாதாரத் துறை வளர்ச்சியடையும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய எலிசபத் பிரொட்ரிக், “இலங்கையில் தனியார் மற்றும் அரச துறைகளில் பெண்களின் வகிபங்கு அவர்களது சுய அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தியில் பெண்களின் ஈடுபாடு போன்ற விடயங்களை தெரிந்து கொள்ள தான் மிக ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார்.