vehiclesசில வாகனங்களில் உற்கத்திவரியானது இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சற்று முன்னர் தெரிவித்தார்.

அதன்படி 150 சிசி இற்கு குறைந்த மோட்டார் சைக்கிள், சிறிய ரக வாகனம் மற்றும் பாரவூர்திகளுக்கு அறவிடப்பட்டு வந்த உற்பத்தி வரியானது 90 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். குறித்த வரியானது 3 இலட்சம் ரூபாவால் குறைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இணைய சேவை தொடர்பில் அறவிடப்பட்டு வந்த 10 சதவீத தொலைதொடர்பு வரி முழுமையாக நீக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. குறித்த வரி நீக்கமானது எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.