இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழீழ மக்கள் விடுதலைக் கழக சர்வதேச கிளைகளின் இணைப்பாளர் திரு. எஸ்.ஜெகநாதன் அவர்கள் (16.08.2017) முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு பிரதேசத்திற்கு சென்று அங்கு தமது சொந்த நிலத்தை மீட்கும் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துள்ள மக்களை சந்தித்து அவர்களோடு கலந்துரையாடி, அவர்களின் நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார்.
அவருடன் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் பொருளாளரும், வட மாகாணசபை உறுப்பினருமான கந்தையா சிவநேசன், கட்சியின் செயற்குழு உறுப்பினர் க.தவராஜா மாஸ்டர் ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.