முன்னாள் சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் போதி லியனகே, திடீர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 5 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக கண்டி மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாடிப்படியில் இருந்து திடீரென விழுந்த நிலையில், கண்டி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர், இரண்டு தினங்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்றையதினம் அதிகாலை அவர் உயிரிழந்ததாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்திருந்தார். காவல்துறை சிறப்பு படையணியின் முதலாவது கட்டளைத் தளபதி இவரென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.