இலங்கை பூராகவும் தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்றுகாலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 12.15 வரை இடம்பெற்றது. சுமார் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 728 பேர் மாணவர்கள் பரிட்சைக்கு தோற்றினர்.
இவர்களில் 562 மாணவர்கள் விஷேட தேவையுடயவர்களாவர். புலமை பரிசில் பரீட்சைக்கான முதலாவது வினாத்தாளுக்கான பரீட்சை காலை 9.30 இலிருந்து 10.15 வரைக்குமான 45 நிமிடங்களை கொண்டிருந்ததுடன், இரண்டாம் வினாத்தாள் முற்பகல் 10.45 மணிமுதல் நண்பகல் 12 மணி வரைக்குமான 1 மணி நேரமும் 15 நிமிடங்களையும் கொண்டிருந்தது. பரீட்சை கண்காணிப்பு நடவடிக்கைக்காக நாடு பூராகவும் 28,000 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர். நெடுந்தீவு, நைனாதீவு, அனலைதீவு உட்பட நாடு பூராகவும் 3014 மத்திய நிலையங்களில் தரம் ஐந்திற்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.