வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டம் அமைதிபுரம் பாடசாலை மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
எமது புலம்பெயர் உறவான ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த திரு.திருமதி. கிருபா வசந்தி தம்பதிகளின் புதல்வியான வைசாலியின் பூப்புனித நீராட்டு விழாவை முன்னிட்டு வழங்கப்பட்ட நிதி அன்பளிப்பின்மூலம் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் நேற்று துணுக்காய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அமைதிபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் 61 மாணவர்களுக்கு ரூபா 40,000 பெறுமதியான மழைக்கவசங்கள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் இவ் பாடசாலையைச் சேர்ந்த மாணவர்களுக்கு காலணிகள் மற்றும் புத்தகபைகள் வழங்கிய சந்தர்ப்பத்தில் பாடசாலை நிர்வாகத்தினால் தமது பிரதேச மாணவர்கள் போரினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மிகவும் பின்தங்கிய பொருளாதார சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
இதனுடன் வருகின்ற மூன்றாம் தவணைப் பாடசாலை ஆரம்பமாகும் வேளையில் மழைக்காலம் ஆரம்பித்து விடுவதனால் மாணவர்களின் வரவு குறைவாக காணப்படும் இதனை கருத்தில் கொண்டு தவணை ஆரம்பிப்பதற்கு முன்னதாக மாணவர்களுக்கு மழைக்கவசங்கள் மற்றும் அப்பியாசக் கொப்பிகளை தந்துதவினால் இது மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் பாரிய ஊக்குவிப்பாக அமையுமென கேட்டுக்கொண்ட கோரிக்கைக்கு அமைவாக வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினால் உடனடியாக மாணவர்களுக்கான இவ் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ் மாணவர்களுக்கான அவசர உதவிகளை வழங்குவதற்கு நிதி அன்பளிப்பினை வழங்கி மாணவர்களின் கற்றல் செயற்பாட்டில் ஒளியேற்றி வைத்துள்ள வைசாலியின் பெற்றோருக்கு எமது சங்கத்தின் சார்பிலும் மாணவர்கள் சார்பிலும் பாடசாலை சமூகத்தின் சார்பிலும் நன்றிகளை கூறிக்கொள்வதுடன் வைசாலிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். (வட்டு இந்து வாலிபர் சங்கம்)