வவுனியா கூமாங்குளத்தில் 20.08.2017 அன்று கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் திரு புஸ்பராஜா அவர்களின் தலைமையில் கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டது.
இவ் கலந்துரையாடலில் வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி லிங்கநாதன் அவர்களும் மற்றும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதா சத்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
இவ் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் கூமாங்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு S.புஸ்பராஜா, செயலாளர் திரு.மா.சுரேந்திரன், கூமாங்குளம் மரண உதவிச் சங்க தலைவர் திருP.கணேசன்,பொருளாளர் திரு வே.நந்தபாலன்,கூமாங்குளம் சித்தி விநாயகர் ஆலய தலைவர் ந.ஆறுமுகம், கூமாங்குளம் அஸ்திரம் இளைஞர் கழக தலைவர் நா.ஸ்ரீதரன் ,கூமாங்குளம் கிரம அபிவிருத்தி சங்க நிர்வாக உறுப்பினர்கள் சோ.துரைராஜ், மு.குருசாமி ஆகியோருடன் சமூகமட்ட அமைப்புகள் மற்றும் கிராம மக்கள் இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.