வட மாகாண அமைச்சர் சபை கூட்டத்தில் பா.சத்தியலிங்கம் தவிர்ந்த ஏனைய அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்த நிலையில், அமைச்சர் சபை கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டம் இன்று நடைபெற்றது இதில் பா.சத்தியலிங்கம் மற்றும் பா.டெனீஸ்வரன் ஆகியோர் நீக்கப்பட்டு அந்த இடத்திற்கு புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறப்பட்டது.அமைச்சர் பா.டெனீஸ்வரனை அமைச்சு பதவியிலிருந்து நீக்க வேண்டும் என ரெலோ
கூறிவருகின்றது. இதற்கிடையில் அமைச்சர் டெனீஸ்வரனை பதவி நீக்கும்படி முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் சபை கூட்டத்தின் நிறைவில் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் என்னை பதவி நீக்குவதற்கான கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் இன்றைய தினம் அமைச்சர் சபை கூட்டம் அமைதியாக நடைபெற்றிருந்தது. அடுத்தகட்டம் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றார்.
எனினும் மேற்படி அமைச்சர்கள் விடயம் தொடர்பாக கருத்து தெரிவிப்பதற்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.