bavan01மக்களின் தேவைகளை என்னால் இயன்றவரை பூர்த்தி செய்வேன்: வடமாகாண புதிய விவசாய அமைச்சர் -க.சிவநேசன்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் வேண்டுமென்ற அடிப்படையில் விவசாயம் மற்றும் மீன்பிடி போன்ற அமைச்சுப் பொறுப்புக்கள் எனக்கு வழங்கப்பட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகச் செயலாற்றுவதுடன், மக்களின் தேவைகளையும் என்னால் இயன்ற வரை நான் பூர்த்தி செய்வேன் எனப் புதிதாகப் பதவியேற்றுள்ள வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.புளொட் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த க.சிவநேசன் வடமாகாண விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை, மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே முன்னிலையில் இன்று பிற்பகல் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டு பதவியேற்றார்.

புதிய அமைச்சராகப் பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவுறுவதற்கு மிகக் குறுகிய காலங்களே உள்ளன.

அந்தக் குறுகிய காலத்திற்குள் என்னாலான முயற்சிகளை மேற்கொள்வேன் என்பதனை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

bavan01