kepapulavu campகேப்பாப்புலவு கிராமத்து மக்களை மீள்குடியேற்றுவதற்காக, அவ்விடத்தில் உள்ள இராணுவ முகாமை பிறிதோர் இடத்தில் ஸ்தாபிப்பதற்குத் தேவையான நிதியை ஒதுக்கிக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே அங்கிகாரம் கிடைத்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கோப்பாப்புலவு கிராமத்து மக்களை மீள்குடியேற்றுவதற்காக வேண்டி, இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 432 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 111 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கு இராணுவ தளபதி இணக்கம் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், அக்காணிப்பகுதியை விடுவிப்பதற்காக வேண்டி அவ்விடத்தில் காணப்படுகின்ற இராணுவ முகாமை பிறிதோர் இடத்தில் ஸ்தாபிப்பதற்குத் தேவையான நிதியை ஒதுக்கிக் கொள்வதற்கே, அங்கிகாரம் வழங்கியுள்ளது.