கடந்த 23.08.2017 புதன்கிழமை வட மாகாண விவசாயம், கமநலம், கால்நடை, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல், சுற்றுலா துறைகளின் அமைச்சராக வட மாகாண ஆளுநர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட
புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாளர் கௌரவ கந்தையா சிவநேசன் அன்றுபிற்பகல் அமைச்சின் செயலாளர் காரியாலயத்தில் தனது கடமைகளை ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.