01 (20)முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு இரண்டாம் வட்டாரம் கைவேலியில் நேற்றையதினம் (24.08.2017)உதவி வழங்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது.

இதில் பிரதம விருந்தினராக வட மாகாண கால்நடை, விவசாய, நீர் வழங்கள், மீன்பிடி அமைச்சர் கௌரவ கந்தையா சிவநேசன், கைவேலி சுரேஸ் குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் நிக்சன், மாதர் சங்க தலைவி காயத்ரி, புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர் வே.மணியம், முள்ளிவாய்க்கால் மகளீர் அமைப்பு தலைவி கமலா, திம்பிலி வட்டார கிராம அபிவிருத்தி சங்க தலைவர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். இதன்போது காந்தள் நிறுவனத்தின் லண்டனில் அமைந்துள்ள தொடர்பகம் ஊடாக ஐந்து பாடசாலைப் பிள்ளைகளுக்கு சைக்களும், இரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவியும் வழங்கிவைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

01 (5) 01 (23) 01 (11) 01 (2) 01 (8) 01 (10) 01 (13) 01 (14) 01 (20) 01 (26) 01 (6) 01 (16) 01 (17) 01 (18) 01 (19) 01 (21) 01 (22) 01 (27) 01 (32)