புதிய நீதி அமைச்சராக தலதா அத்துகோரள இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
அத்துடன், புதிய புத்தசாசன அமைச்சராக காமினி ஜயவிக்ரம பெரேரா தனது பதவிப்பிரமாணத்தை ஜனாதிபதி முன்னிலையில் செய்து கொண்டார். இந்த பதவிப்பிரமாணங்கள் இரண்டும் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. நீதியமைச்சர் தலதா அத்துகோரள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு மேலதிகமாக நீதி அமைச்சையும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.