இந்தியாவிடம் இருந்து மேலும் சில பாதுகாப்புக் கப்பல்களை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ட்ரெவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார்.
கண்டி அஸ்கிரிய பீட மகாநாயக்கர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் கடற்பாதுகாப்பை வலுப்படுத்தும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ட்ரெவிஸ் சின்னையா மேலும் குறிப்பிட்டுள்ளார்.