முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தில் 53 அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஜனாதிபதி நடமாடும் சேவை நேற்று நடாத்தப்பட்டது. அமைச்சர் திலக் மாரப்பன வஜேர விஜயவர்தன, பாராளுமன்ற உறுப்பினர்கள்,
வடமாகாண விவசாய மீன்பிடி அமைச்சர் க.சிவநேசன், பிரதி அவைத்தலைவர், மாகாணசபை உறுப்பினரகள், அரச அதிபர், பிரதேச செயலகர்கள், படைத்துறை அலுவலகர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது காணி பத்திரம், சுயஉதவி நிதி என்பன வழங்கப்பட்டது. ஏனைய அரச நிறுவன தேவைகளுக்காக மக்கள் இதனை பயன்படுத்தியிருந்தனர்.