முல்லைத்தீவு முத்தையன்கட்டு பிரதேசத்தில் நேற்றையதினம் மக்கள் குறைகேள் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் புளொட்டின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாளரும்,
வட மாகாண கால்நடை, விவசாய, நீர் வழங்கள், மீன்பிடி அமைச்சர் கௌரவ கந்தையா சிவநேசன் அவர்கள் கலந்துகொண்டு மக்களின் நிலைமைகளைக் கேட்டறிந்து கொண்டார். இதில் பெண்கள் அமைப்பு, கிராம சங்கம், மீனவர் சங்கம், கமக்காரர் சங்கம் பாடசாலை பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.