south koreaசட்டவிரோதமான முறையில் தென்கொரியாவில் தங்கியுள்ள இலங்கை பணியாளர்களுக்கு அந்த நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காலம் எதிர்வரும் 10 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.

கடந்த ஜூலை 10ஆம் திகதி தொடக்கம் பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்தது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவலின்படி குறித்த காலப்பகுதியில் நாடு திரும்பும் பணியாளர்கள் தொடர்பில் சட்டநடிக்கை எடுக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதேவேளை, 2017ஆம் ஆண்டுக்கு அமைவாக கடந்த ஏப்ரல் 27ஆம் திகி இடம்பெற்ற கொரியா பாஷை திறன்பரீட்சைக்கு தோற்றமுடியாமல் போனவர்களுக்கு மீண்டும் பரீட்சையில் தோற்றுவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என கொரிய மனிதவள பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.