vvvvTHIGUVI சர்வதேச கல்விச்சேவை நிறுவனத்தின் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் ஜெட்விங்க் விடுதியில் நேற்றையதினம் (27.08.2017)நடைபெற்றது. இந்நிகழ்வினை THIGUVI இயக்குநர்களுள் ஒருவரான செல்வரட்ணம் குலசேகரம் (குணபாலன்) தொகுத்து வழங்கியதோடு THIGUVI கல்விச்சேவை மையத்தின் இயக்குநர்களுள் ஒருவரான விஜயசேகரன் இரட்ணசபாபதி அவர்களும் உடனிருந்தார்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், வட மாகாண அமைச்சர் க.சிவநேசன், வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் மற்றும் மலேசியாவிலிருந்து (American Hospitality Academy-AHC) நிறுவனத்தின் திரு குமரேசன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். இதன்போது THIGUVI கல்விச் சேவை மையத்தினால் ஐந்து பேருக்கு கனடாவிற்கும் நான்கு பேருக்கு மலேசியாவிற்கும் சென்று உயர்கல்வியைச் தொடர்பவதற்கான புலமைப்பரிசில் வழங்கப்பட்டது.

கனடாவிற்கான புலமைப்பரிசிலை கனடாவில் இருக்கின்ற சென்ற் கிளேயர் கல்லூரியும், மலேசியாவிற்கான புலமைப்பரிசிலை மலேசியாவில் இருக்கின்ற (American Hospitality Academy-AHC) நிறுவனமும் ஏற்பாடு செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

27.08.2017 jetwing jaffna (2) 27.08.2017 jetwing jaffna (4) 27.08.2017 jetwing jaffna (6) 27.08.2017 jetwing jaffna (9) 27.08.2017 jetwing jaffna (11) 27.08.2017 jetwing jaffna (13) 27.08.2017 jetwing jaffna (15) 27.08.2017 jetwing jaffna (17) 27.08.2017 jetwing jaffna (19) 27.08.2017 jetwing jaffna (22) 27.08.2017 jetwing jaffna (25) 27.08.2017 jetwing jaffna (26)