frontயாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றினை மேற்கொண்டுள்ள அஸ்கிரிய பீட மகாநாயக்கர் மதிப்பிற்குரிய வராகொட சிறீ ஞானரத்ன மகாநாயக் தேரர் அவர்கள் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கிராமமான கந்தரோடையில் அமைந்துள்ள தொல்பியல் மையத்திற்கு நேற்று (29.08.2017) சென்றிருந்தார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், அஸ்கிரிய பீட மகாநாயக்கர் மதிப்பிற்குரிய வராகொட சிறீ ஞானரத்ன மகாநாயக்க தேரர் மற்றும் வட மாகாண கட்டளைத்தளபதி மேஜர்ஜெனரல் தர்சன ஹெட்டியாராய்ச்சி ஆகியோருக்கிடையிலான சந்திப்பும் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. P1460257 P1460236 (2) P1460240