43ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்ட ஒலிம்பிக் சுடரை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் வைத்து அரசாங்க அதிபர் மற்றும் படையதிகாரிகள் ஏற்றிவைத்தார்கள்.
கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு நோக்கிய இந்த ஒலிம்பிக் சுடர் பயணம் செய்து விசுவமடு, புதுக்குடியிருப்பு, வட்டுவாகல் ஊடாக நேற்றுமாலை முல்லைத்தீவு அரச செயலகத்தை சென்றடைந்தது. இன்றுகாலை 9 மணியளவில் இதன் தொடக்க நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது தேசியக்கொடியினை அரசாங்க அதிபரும், மாகாண கொடியினை வடக்கு மாகாண அமைச்சர் கந்தையா சிவநேசனும் விளையாட்டு கொடியினை 59ஆவது படைப்பிரிவின் படைத்துறை அதிகாரியும் ஏற்றிவைத்தனர். Read more